வாஷிங்டன்: மெக்கா முத்தரப்பு கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் துணிச்சலானது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டி உள்ளார்.

ஆக.7ம் தேதி மெக்காவில் சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையே முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த 3 நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது மற்ற நாடுகள் மீதான தாக்குதலாக கருதப்படும் என்பது முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் ஆகும்.

இந் நிலையில் 3 நாடுகளின் முத்தரப்பு ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெகுவாக பாராட்டி உள்ளார். அவர் கூறி இருப்பதாவது; முத்தரப்பு ஒப்பந்தமானது, மத்திய கிழக்கு நாடுகள் ஒன்றிணைவதற்கான பெரிய துணிச்சலான, முக்கியமான முதல் படியாகும். மெக்கா முத்தரப்பு கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். மத்திய கிழக்கு நாடுகள் அர்த்தமுள்ள வகையில் ஒன்றிணையும் என்பதை இது காட்டுகிறது. 3 நாடுகளின் சிறந்த தலைமைத்துவத்திற்கு வாழ்த்துகள். பெரிய, துணிச்சலான, முக்கியமான முதல் படி. இவ்வாறு டிரம்ப் கூறி உள்ளார்.