துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் தள பதிவில் கூறியிருப்பதாவது,
மதுரை மாவட்டம் பாலமேட்டில் புகழ்பெற்ற, தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை தொடங்கி வைத்து பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தோம். வாடிவாசலில் சீறி வரும் காளைகள், வீரத்தை வெளிப்படுத்தும் மாடுபிடி வீரர்கள், ஆர்வமிக்க பார்வையாளர்கள் என பாலமேடு ஜல்லிக்கட்டு உற்சாகமூட்டியது. உலகில் நிகரற்ற நமது பாரம்பரியம், கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் பாசிசவாதிகளை வீழ்த்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் என்றும் தமிழகத்தின் தனித்துவத்தை காப்போம். பாலமேட்டில் களம் கண்டுள்ள வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கும் எனது அன்பும் வாழ்த்தும். இவ்வாறு அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.