தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதனை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள 10 பேர் கொண்ட குழுவை அமைத்து த.வெ.க. தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாநில, மாவட்ட, தொகுதி அளவிலான தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள, பின்வரும் முறையில், தேர்தல் பிரசாரக் குழு அமைக்கப்படுகிறது. அதன்படி என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஏ. செங்கோட்டையன், பார்த்திபன், ராஜ்குமார், விஜய் தாமு, செல்வம், பிச்சைரத்தினம் கரிகாலன், செரவு மைதின் (எ) நியாஸ், கேத்ரின் பாண்டியன் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும். இக்குழுவிற்கு கட்சித் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.