மதுரை, அக். 17-

மதுரை மாநகராட்சியில் கடந்த 2 மாதங்களில் ரூ.45.79 கோடி சொத்துவரி வசூல் செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான முதல் அரையாண்டு, இரண்டாம் அரையாண்டு சொத்துவரி செலுத்துவோருக்கு மாநகராட்சி நிர்வாகம் 5 சதவீதம் முதல் ரூ.5,000 வரை ஊக்கத்தொகை அறிவித்துள்ளது.

மதுரையிலுள்ள 100 வார்டுகளில் 4.12 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உள்ளன. இந்தக் கட்டிடங்கள் மீதான சொத்துவரி வருவாய் சராசரியாக ரூ.275 கோடி வரை கிடைக்கிறது. மாநகராட்சி 5 மண்டலங்களிலும் உள்ள 100 வார்டுகளில் நீண்ட காலமாக வரி செலுத்தாத டாப்-100 நிலுவை வைத்துள்ள சொத்து உரிமையாளர்களிடமிருந்து வரியை வசூல் செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மண்டல வாரியாகவே அதிகவரி நிலுவை வைத் துள்ளவர்களின் பட்டியலை, மாநகராட்சி தனது இணைய தளத்தில் சமீபத்தில் வெளியிட்டது. மேலும், அவர்கள் சொத்துகளை முடக்க, கையகப்படுத்த நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

1.4.2026 560 30.04.2026 (முதலாம் அரையாண்டு) மற்றும் 1.10.2026 முதல் 31.10.2026 (இரண்டாம் அரையாண்டு) சொத்துவரி செலுத்தும் பொதுமக்களுக்கு தாங்கள் செலுத்தும் தொகைக்கு 5 சதவீதம் முதல் ரூ.5000 வரை ஊக்கத்தொகை அரசால் வழங்கப்படுகிறது.

இச்சலுகை விவரங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டுள்ளது. முக்கிய வணிகக் கட்டிடங்கள், தங்கும் விடுதிகள், சினிமா தியேட்டர்கள், உணவு விடுதிகள், திருமண மண்டபங்கள், மருத்துவமனைக் கட்டிடங்கள் மற்றும் அதிகப் படியான சொத்துவரி நிலுவை வைத்துள்ள உரிமையாளர்களுக்கு, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி விதிகள் 269-ல் தெரிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி, 01.08.2026 முதல் படிவம் 4-ல் 312 அறிவிப்பு களும், படிவம் 5-ல் 57 அறிவிப்புகளும் மற்றும் படிவம் 7-ல் 5 அறிவிப்புகளும் விடுக்கப்பட்டுள்ளன. சொத்துவரி அதிகமாக மொத்தம் ரூ.23.03 கோடி நிலுவை வைத்துள்ள உரிமையாளருக்கு அறிவிப்புகள் வழங்கப்பட்டு, ரூ.4.44 கோடி வரிவசூல் செய்யப்பட்டுள்ளது. சொத்துவரி இனங்களில் வார்டு வாரியாக அதிக நிலுவை வைத்துள்ள உரிமையாளர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி வரிவசூல் செய்யப்பட்டதில், கடந்த 2 மாதங்களில் ரூ.45.79 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.