மதுரை, செப். 29-

மதுரையில் ரூ 1.05 கோடியில் புனரமைக்கப்ப

ட்ட காந்தி அருங்காட்சி

யகத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.

முன்னதாக அந்த வளாகத்தில் இருந்த காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட தொடக்க விழாவுக்கு முதல்வர் விஜய் வருகை தந்தார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள கூட்டரங்கில் இந்த விழா நடத்தப்பட்டது.

அப்போது ஒவ்வொரு குழந்தைகளின் விரல்களிலும் விஜய் மோதிரங்களை அணிவித்தார். தாய்மார்களின் விருப்பத்திற்கேற்ப குழந்தைகளை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார்.

பின்னர் அங்கு தாய்மார்கள், குழந்தைகளுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட விஜய், அங்கிருந்து திறந்தவெளி பிரச்சார வேனில் நின்றபடியே காந்தி அருங்காட்சியகத்திற்கு பயணம் செய்தார்.

அப்போது வழிநெடுகி

லும் மக்கள் அவரை வரவேற்றனர். அவர்களுக்கு கைகூப்பி வணக்கம் சொன்னார். பின்னர் ராணி மங்கம்மாள் அரண்மனை வளாகத்தில் உள்ள காந்தி அருங்காட்சியகத்திற்கு வருகை தந்த விஜய்யை அருங்காட்சியக நிர்வாகிகள் வரவேற்றனர்.

இதையடுத்து அங்கிருந்த காந்தியின் சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அருங்காட்சியகத்தை தொடங்கி வைத்த அவர் உள்ளே சென்று காந்தி பயன்படுத்திய பொருட்களை ஆர்வமுடன் பார்வையிட்டார்.

இதையடுத்து காந்தியின் பெருமைகளை சொல்லும் வீடியோ ஒன்று திரையிடப்பட்டது. அதை விஜய் பார்த்தார். இந்த அருங்காட்சியகம் 1959 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது இந்த அருங்காட்சியகம் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டது.