இந்திய திருநாட்டின் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரையில் 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் திருமங்கலம் ஊராட்சி ஒன் றியத்துக்குட்பட்ட உச்சப்பட்டி கிராமத்தில் ஊராட்சி செயலர் ஈஸ்வரன் தீர்மானங்களை வாசித்து பொதுமக்களிடம் விளக்கினார். கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சிறுபாசன குளங்கள் மற்றும் ஏரிகள் புதுப்பித்தல், ஜல் ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்கத்திட்டம் மற்றும் இதர கூட்டப்பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.