மதுரை, அக். 10-

மதுரையில் வங்கி கணக்கில் இருந்து பணத்தை சுருட்டும் ஆன்லைன் மோசடி தொடர்ந்து நடக்கிறது. வாரத்தில் 5 நாட்கள் இதுபோன்ற புகார்கள் போலீசாருக்கு வருகின்றன. மக்கள் இதுகுறித்து விழிப்புணர்வு பெறாதததே தொடர் மோசடிகளுக்கு காரணம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற கப்பற்படை அதிகாரி. வாட்ஸ் ஆப்பில், மகளுக்கு சுரிதார் மெட்ரீயல்ஸ் வாங்க தங்களை தொடர்பு கொள்ளுமாறு தொடர்ந்து இன்ஸ்டா சமூகவலைதள ‘லிங்க்’ மூலம் மெசேஜ் வந்துக்கொண்டிருந்தது. இதை நம்பி ரூ.999 அனுப்பிய நிலையில், ‘பணம் அனுப்பியது பதிவாகவில்லை. மீண்டும் அனுப்புமாறு’ மெசேஜ் வந்தது. இப்படி 14 முறை மெசேஜ் வந்து ஒவ்வொரு முறையும் அவர் பணம் அனுப்பினார். பின்னர் சந்தேகப்பட்டு பணத்தை அனுப்ப மறுத்தபோது, ‘அனுப்பிய தொகையை திருப்பித்தர நாங்கள் கேட்கும் தொகையை அனுப்ப வேண்டும்’ என மிரட்டி மொத்தம் ரூ.1.38 லட்சத்தை மோசடி செய்தனர்.

மதுரை கருப்பாயூர

ணியைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆன்லைனில் வேலை தேடினார். அவருக்கு டெலிகிராமில் அதற்கான ‘லிங்க்’ வந்தது. அதில் பதிவு செய்த நிலையில் ‘சில ‘டாஸ்க்’ கொடுப்போம். அதை முடிக்க வேண்டும்’ என்று மெசேஜ் வந்தது. அந்த ‘டாஸ்க்’கை அப்பெண் பாதி முடித்த நிலையில், பணம் செலுத்தினால் மட்டுமே அடுத்தக்கட்ட

த்திற்கு செல்ல முடியும் என்ற நெருக்கடி தரப்பட்டது. அவர்கள் கேட்ட தொகையை செலுத்தியபிறகும் மீண்டும் மீண்டும் ‘டாஸ்க்’ கொடுத்து மொத்தம் ரூ.1.29 லட்சத்தை மோசடி செய்தனர்.

மதுரை தெற்குமாசி வீதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் நபரை தொடர்பு கொண்ட தனியார் நிதி நிறுவன ஊழியர், ‘உங்கள் தொழில் வளர்ச்சிக்காக கடன் தருகிறோம்’ என்றார். இதற்கு சம்மதித்த நிலையில், கடன் பரிவர்த்தனை கட்டணம் என்றுக்கூறி அடுத்தடுத்து பணம் பெற்றனர். சந்தேகப்பட்டு தொடர்ந்து பணத்தை அனுப்ப மறுத்தபோது, ‘நாங்கள் கூறும் தொகையை செலுத்தினால்தான் கடன் தரப்படும்’ என மிரட்டி மொத்தம் ரூ.1.19 லட்சம் பெற்று மோசடி செய்தனர்.

போலீசார் கூறியதாவது: வாரத்திற்கு குறைந்தது 5 புகார்களாவது வருகின்றன. பெரும்பாலும் படித்தவர்களே இந்த ஆன்லைன் மோசடிக்கு ஆளாகின்றனர். அவசர தேவை போன்ற காரணங்க

ளாலும் மோசடிக்கு பலர் இரையாகின்றனர். இனியாவது விழிப்புண

ர்வோடு மக்கள் இருக்க வேண்டும். ஆன்லைன் மோசடி நபர் என சந்தேகம் வந்தால் உடனடியாக இலவச எண்ணான ‘1930’ஐ தொடர்பு கொள்ளலாம் என்றனர்.