மதுரை, அக். 17-

மக்களவையின் வர்த்தகத் துறை நிலைக்குழு உறுப்பினராக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் நியமிக்கப்பட்டு

ள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முன்னாள் பிரதமர்கள் ஐ.கே.குஜரால், மன்மோகன் சிங் ஆகியோரால் தலைமை தாங்கி வழிநடத்த

ப்பட்ட மக்களவையின் வர்த்தகத் துறை சார்ந்த விவகாரங்களுக்கான நிலைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளேன்.

இந்தக் குழு மத்திய வணிகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வணிகத் துறை-தொழில்-உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை ஆகிய

வற்றின் செயல்பாடு

களை நாடாளு

மன்றக் கட்டு

ப்பாட்டின் கீழ் கண்காணி

க்கிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகம், ஏற்றுமதி சார்ந்த செயல்பாடு

கள், இரு துறைகளின் மானியக் கோரிக்கைகளை ஆராய்தல், ஆண்டறிக்கை

களின் அடிப்படையில் குழு தேர்ந்தெடுக்கும் முக்கியப் பொருள்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து, அது தொடர்பான அறிக்கை

களை மக்களவையில் சமர்ப்பித்தல் ஆகிய பணி

களை இக்குழு மேற்கொள்ளும்.

தமிழகத்தில் செயல்படும் வர்த்தகம் மற்றும் தொழில் அமைப்புகள், வணிகச் சங்கங்கள், தொழில் முனைவோர் மற்றும் பொது மக்கள் இத்துறை சார்ந்த மக்கள் நலன், நாட்டு நலன், மாநிலத்தின் தொழில், வணிக வளர்ச்சி

யை மையப்படுத்திய ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை என் கவனத்துக்குக் கொண்டு வரலாம். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க முழு முயற்சி எடுப்பேன், என அவர் குறிப்பிட்டு

ள்ளார்.