மதுரை, அக். 17-

தனியார்மயமாக்கும் முயற்சியை கண்டித்து மின் வாரிய அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மதுரை கோ.புதூர் மண்டல மின் தலைமை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் இமானுவேல் தலைமை வகித்தார். இதில் அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மின்வாரியத்தில் தனியார்மயத்தை கைவிட வேண்டும். மின்வாரியம் அறிவித்துள்ள ஸ்மார்ட் மீட்டர் திட்ட டெண்டர் அறிவிப்பை திரும்பப்பெற

வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

பின்னர் ஒருங்கிணை

ப்பாளர் இமானுவேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், தவெக அரசு மின்வாரிய கட்டமைப்பை முற்றிலுமாக சீர்குலைத்து முழுமையாக தனியார் வசம் ஒப்படைக்கும் வேலையை செய்து வருகிறது. பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்த முயற்சிக்கி

ன்றனர்.

மின்சாரத்தை ரூ.35-க்கு கொள்முதல் செய்வது மக்களை கடுமையாக பாதிக்கும். இதனால் மின் கட்டணம் உயர வாய்ப்புள்ளது. இதைக் கண்டித்து வரும் நவ. 2-ம் தேதியிலிருந்து தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும்.

அமைச்சர் நிர்மல்கு

மாரின் துறை சார்ந்த செயல்பாடுகள் தொழிற்ச

ங்க கோரிக்கைகளுக்கு எதிராக உள்ளது. அவர் மின்வாரியத்தை தனியார்மயமாக்க முயற்சிக்கிறார். மத்திய அரசு சொல்வதை மாநில அரசு அப்படியே செய்கிறது என்று கூறினார்.