திமு கழக முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு அவர்களின் இல்லத் திருமண விழாவை முன்னிட்டு, திருமண அழைப்பிதழ்களை வழங்குவதற்காக புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்திற்கு வருகை தந்த அவரை, சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்து ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்று மகிழ்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் திமு கழகச் செயலாளர் கே.கே. செல்லப்பாண்டியன் அவர்களிடம் திருமண விழா அழைப்பிதழை வழங்கி, புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் அனைவரும் திருமண விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பு விடுத்தார்.இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.