ஓ பன்னீர் செல்வம் அணியில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க. என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தோடு கூட்டணி வைத்து வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பண்ருட்டி ராமச்சந்திரன் எம்.ஜி.ஆரின் தளபதிகளில் ஒருவராக திகழ்ந்தவர். பா.ம.க, விஜயகாந்துடன் இணைந்து செயல்பட்ட அவர் தற்போது ஓ பன்னீர் செல்வத்தின் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவில் ஆலோசகராக இருந்து வந்தார்.
தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் ஓ பன்னீர் செல்வத்துடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் புதிய கட்சியை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் தி.மு.க.வில் இணைந்த நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சியை தொடங்க இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நடிகர் விஜய்யின் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.