ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பிப்ரவரி 1-ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 28-ம் தேதி அன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது. அதை தொடர்ந்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இது நிர்மலா சீதாராமனின் 9-வது பட்ஜெட் ஆகும். இது முன்னாள் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் தாக்கல் செய்த சாதனை 10 பட்ஜெட்டுகளில் ஒன்று குறைவாகும். முதல் பகுதி கூட்டத்தொடர் பிப்ரவரி 13-ம் தேதி முடிவடைந்து மார்ச் 9-ம் தேதி மீண்டும் கூடும். பின்னர் ஏப்ரல் 2-ம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.