டெல்லி: பாஜகவில் அமைப்பு ரீதியாக அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தேசிய அளவில் 65 பாஜக நிர்வாகிகளை மாற்றம் செய்து அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் உத்தரவிட்டுள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த வசுந்தரா ராஜே சிந்தியா, உத்தரகண்டைச் சேர்ந்த தீரத் சிங் ராவத், டெல்லியைச் சேர்ந்த ராம் மாதவ் உள்பட 11 பேர் துணைத் தலைவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவரைத் தவிர வினோத் தவாடே, சுனில் பன்சால், திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேப், சதீஷ் பூனியா, கஜேந்திர படேல், ஹரீஷ் திவேதி மற்றும் சஞ்சய் பாட்டியா ஆகியோரும் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், 8 பேர் கொண்ட தேசிய பொதுச் செயலாளர்கள் பட்டியலில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி இணைந்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் கட்சிப் பொறுப்புகளை கவனிக்கும் வகையில் இவர், தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பி.எல். சந்தோஷ் தேசிய பொதுச் செயலாளர் (அமைப்புச் செயலாளர்) பொறுப்பில் தொடர்ந்து நீடிக்கிறார். மேலும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாஜகவின் தேசியப் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் தேசியச் செயலாளர்களாக கே. சுரேந்திரன், அனில் அந்தோணி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் எம். வெங்கடேசன் உட்பட 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.