தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை சிதைக்கும் நோக்கத்தோடு செயல்படும் பா.ஜ.க. அரசை கண்டித்து, அகில இந்தியகாங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, 5-ம் தேதி(இன்று) மதியம் 2 மணியளவில் எனது தலைமையில் சென்னை, திருவள்ளூர், ஆவடி, செங்கல்பட்டு, காஞ்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலையில் நடைபயணம், கிழக்கு தாம்பரம் - பாரத மாதா தெரு, வேளச்சேரி சாலை சந்திப்பில் அமைந்துள்ள காமராஜர் சிலை அருகிலிருந்து, மேற்கு தாம்பரம் - சண்முகம் சாலை வரை நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதே போன்று, வரும் 7-ம் தேதி திருச்சியிலும், 8-ம் தேதி திண்டுக்கல்லிலும், 9-ம் தேதி தென்காசியிலும், 12-ம் தேதி கோவையிலும் நடைபயணம் நடைபெறும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.