மெக்கா: பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி நாடு​கள் இடையே நேற்று முத்​தரப்பு பாது​காப்பு ஒப்​பந்​தம் கையெழுத்தானது. இதன்​படி ஒரு நாட்​டின் மீது தாக்​குதல் நடத்தப்பட்​டால் 3 நாடு​கள் மீதான தாக்​குதலாக கருதப்​படும் என்று அறிவிக்​கப்​பட்டு உள்​ளது.

கடந்த 2025-ம் ஆண்டு செப்​டம்​பரில் பாகிஸ்​தான், சவுதி அரேபியா இடையே பாது​காப்பு ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதன்​படி எதிரி நாடு​களால் சவுதி அரேபி​யா​வுக்கு அச்​சுறுத்​தல் ஏற்​பட்​டால் பாகிஸ்​தானின் அணு ஆயுதங்​களை பயன்​படுத்த ஒப்பந்​தத்​தில் வழி​வகை செய்​யப்​பட்டு இருக்​கிறது. இந்த சூழலில் பாகிஸ்​தான், சவுதி அரேபி​யா​வுடன் புதி​தாக துருக்​கி​யும் கைகோர்த்து உள்​ளது. சவுதி அரேபி​யா​வின் மெக்​கா​வில் நேற்று சிறப்பு மாநாடு நடைபெற்​றது. இதில் சவுதி இளவரசர் சல்​மான், பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அந்த நாட்டு ராணுவ தளபதி அசிம் முனீர், துருக்கி அதிபர் எர்​டோகன் ஆகியோர் பங்​கேற்​றனர். அப்போது பாகிஸ்​தான், சவுதி அரேபி​யா, துருக்கி நாடு​கள் இடையே முத்​தரப்பு பாது​காப்பு ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: பல்​வேறு விவ​காரங்​களில் 3 நாடு​கள் இடையே ஒரு​மித்த கருத்து நில​வு​கிறது. முஸ்​லிம் மதம் 3 நாடுகளை​யும் ஒன்​றிணைக்​கிறது. இதன் அடிப்​படை​யில் சவுதி அரேபி​யா, துருக்​கி, பாகிஸ்​தான் நாடு​கள் இடையே முத்​தரப்பு பாது​காப்பு ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது. புதிய ஒப்​பந்​தத்​தின்​படி ஒரு நாட்​டின் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டால் 3 நாடு​கள் மீதான தாக்​குதலாக கருதப்​படும். மூன்று நாடு​களும் ஓரணி​யாக செயல்​படும். இவ்​வாறு முத்​தரப்பு பாது​காப்பு ஒப்​பந்​தத்​தில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.