பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகி லக்கி ஓபராய் நேற்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜலந்தரில் உள்ள குருத்வாராவில் இருந்து நேற்று காலை 7.50 மணியளவில் வெளியே வந்த லக்கி ஓபராய் அவரது காரில் ஏறியுள்ளார். அப்போது இரண்டு ஸ்கூட்டர்களில் வந்த மர்ம நபர்கள் காருக்குள் இருந்த லக்கி ஓபராயை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். சுமார் 8 முதல் 10 முறை அவரை நோக்கிச் சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், உயிரிழந்து விட்டதாக ஜலந்தர் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் ஜலந்தர் தொகுதியின் பொறுப்பாளர் ராஜ்விந்தர் தியாராவுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படுகிறார்.