தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலை சந்திக்க த.வெ.க.வும் தீவிரமாக இறங்கியுள்ளது. நடிகர் விஜய் புதிதாக தொடங்கிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் புதிதாக களம் காண இருக்கிறது. இததனிடையே கடந்த சில நாட்களாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டங்கள் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மற்றும் தேர்தல் பிரசார குழு கூட்டங்கள் நடந்து வருகிறது.
அதே நேரத்தில், கடந்த டிசம்பர் 18-ம் தேதி ஈரோட்டில் நடந்த மக்கள் சந்திப்புக்கு பிறகு விஜய் பொது நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை. ஜனநாயகன் பட விவகாரம், சி.பி.ஐ. விசாரணை என்று தன்னை சுற்றிய விஷயங்களில் விஜய் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். இந்தநிலையில், வரும் 25-ம் தேதி விஜய் நிர்வாகிகளை சந்தித்து பேச இருக்கிறார். 25-ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடக்கும் த..வெ.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் அரசியல் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து விஜய் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.