மதுரை: தெற்கு வாசல் பகுதியில் இருந்து வில்லாபுரம், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் முக்கிய பாலம் பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ளது. குறுகலான இந்தப் பாலத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வரும் நிலையில், தற்போது பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
பாலத்தை சீரமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், அவ்வப்போது ஒட்டுப்போடும் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தப்படவில்லை எனவும் புகார் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன்பே பாலத்தின் உறுதித்தன்மையை அதிகாரிகள் ஆய்வு செய்து, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாலத்தை முழுமையாக சீரமைக்கவோ அல்லது தேவைக்கேற்ப புதிய பாலம் அமைக்கவோ அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர் பா. சர்மேஷ்கான் வலியுறுத்தியுள்ளார்.