மதுரை, அக். 6-

மதுரை தெற்கு மாவட்ட தவெக. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது:-

திமுக வேட்பாளரை வைத்துக் கொண்டு முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆபாசமாக பேசுகிறார். அவரது அப்பா ஸ்டாலின் தவெக வேட்பாளரை உருவ கேலி செய்கிறார். இவர்கள் இருவரும் இருக்கும் கட்சியில் பெண்கள் எப்படி பயணிக்கிறார்கள் என்பது தெரியவில்லை என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.

மதுரை தவெக மாநகர தெற்கு மாவட்டம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் பேசிய சிடிஆர் நிர்மல்குமார்,” மதுரையில் 8 தொகுதியில் வெற்றி பெற்றோம். வெற்றி பெற்றதால் நலத்திட்ட உதவிகள் உடனே செய்தி வருகிறோம். மதுரையில் எங்கேயுமே கழிவுநீர் கால்வாயில் கிடையாது. பெரும்பாலான இடத்தில் கிடையாது. பெரிய திட்டம் வேண்டும். எப்படியும் 2000 கோடிக்கு மேல செலவாகும்.

முதல்வர் விஜய்யிடம், முதற்கட்டமாக மதுரைக்கு நீங்கள் நிதி ஒதுக்கினால் தான் 3 வருடத்திற்குள் திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்று சொன்னேன். உடனடியாக 110 விதியின் கீழ் சட்டசபையில் மதுரை மக்களுக்காக 2000 கோடி ரூபாய் ஒதுக்கி நம்மளுடைய கழிவுநீர் கால்வாய்களை உடனடியாக ஆரம்பிக்கும் வேலைகளை செய்து கொடுத்தார். இதெல்லாம் வேற எம்எல்ஏ இருந்தா வேற யாராவது நடக்குமா?

அதற்காகத்தான் கார்ப்பரேஷன் முழுவதும் சீக்கிரமா இந்த கவுன்சிலர் எல்லாம் முதல்ல வெளியேறனும். 10 கோடி கொள்ளை அடித்துள்ளனர். முதல்வர் அவர்கள் தாய்மான் தங்க மோதிரம் திட்டம் மதுரையில் தொடங்க வேண்டும் என்று முதல்வர் சொன்னார். அதை செய்தோம்.

வெற்றிப் பயண திட்டம். இதுவும் முதல்வருடைய திட்டம் . கடந்த திமுக ஆட்சியில் ‘ஓசி’ என்று கேலியே பண்ணாங்க. இதை எல்லாம் உணர்ந்து இனிமேல் அந்த மாதிரி எதுவும் கிடையாது. பெண்கள் பஸ்ஸில் ஏறினாலே அவங்களுக்கான பஸ். அவர்களுடைய பஸ். அவங்க வரிப்பணத்தில் வந்த பஸ். இது அவர்களுடைய உரிமை. அவர்கள் கண்டிப்பாக எந்த பேருந்தில் ஏறினாலும் இலவசம் தான்.

உதயநிதி பெண்களை அவதுராக பேசிவருகிறார். இடைத் தேர்தலில் ஸ்டாலின் முகத்தை காட்ட முடியுமா முடியாது. உதயநிதி முகத்தை முட்டு சந்துகுள் கூட காட்ட வரமுடியாது. ஒரே ஒரு சந்தேகம். மீண்டும் கேட்கிறோம். அங்க உள்ள பெண்கள் எப்படி இந்த கட்சியில் கண்டினியூ பண்றது. யாரை நம்பி பயணிக்கிறீங்க.. உங்கள் பாதுகாப்பு தான் முக்கியம். இந்த தேர்தலில் திமுக எக்ஸ்போஸ் ஆக ஆரம்பித்து விட்டது.

உங்களுடைய சொத்துக்களை சேர்த்தால் நீங்கள் ஆசியாவிலேயே பெரிய பணக்காரர். ஆசியாவில் நீங்கதான் பெரிய பணக்கார குடும்பம். இத்தனை லட்சம் கோடி வெறும் வேட்டி சட்டையோடு வந்த திருவாரூரிலிருந்து வந்தவர்களுக்கு எப்படி வந்துச்சு? நீங்க எத்தனை ஆயிரம் கொடுத்தாலும் மக்களுக்கு தெரியும். நீங்க எங்க இருந்து கொள்ளையடிச்சீங்க?

திமுக இண்டு வருஷமாக அவர்களால் ஸ்டெபிலைஸ் ஆக முடியல. அதுக்கப்புறம் அதுக்கு நடுவுல எல்லாம் கொள்ளை அடிக்க ஆரம்பிச்சாங்க. அது நம்ம மதுரையில் முன்னாள் அமைச்சரே அவர் டெய்லி என்னையும் திட்டிட்டு இருக்கார். அவரே ஒரு ஆடியோ ரிலீஸ் ஆச்சு. 30 ஆயிரம் கோடி ஒரு குடும்ப கொள்ளை அடிச்சு பைனான்ஸ் மினிஸ்டர் சொன்ன ஒரு வருஷத்துல ஒரு குடும்பம் 30 ஆயிரம் கோடி கொள்ளை அடித்தார் . ஒரு குடும்பம் மட்டும் 300000 கோடி” என்றார்.