சென்னை தியாகராயர் நகர் வண்டிக்காரன் சாலையில் மாநகராட்சி தூய்மை பணியாளர் பத்மா, தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த போது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பிறருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த பத்மாவிற்கு சால்வை அணிவித்து பரிசு தொகையாக ரூ. ஒரு லட்சம் வழங்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.