அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளருமான சுப்புரத்தினம் நேற்று தி.மு.க.வில் இணைந்தார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளருமான சுப்புரத்தினம் தி.மு.க.வில் இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம் இணைந்தார். இதே போல் சிவகாசி முன்னாள் எம்.எல்.ஏ. பாலகங்காதரனும் தி.மு.க.வில் இணைந்தார்.
சுப்புரத்தினம், பாலகங்காதரன் இருவரும் 1991 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். திண்டுக்கல்லை சேர்ந்த வழக்கறிஞரான சுப்புரத்தினம் ஓ. பன்னீர் செல்வத்தின் மிக தீவிரமான ஆதரவாளர். அ.தி.மு.க.விலிருந்து ஓ. பன்னீர் செல்வம் விளக்கப்பட்ட போது அவர் கூடவே பயணித்தவர். ஓ. பன்னீர் செல்வத்தின் சட்ட போராட்டங்களிலும் முக்கிய பங்கு வகித்தவர் சுப்புரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது.