சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில், பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரியில் வெளியான படம் பராசக்தி. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்த இப்படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருந்தார். பேசில் ஜோசப், ராணா டக்குபதி, சேத்தன் போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் பராசக்தி படம் நாளை 7-ம் தேதி ஜீ 5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிவகார்திகேயன் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரது 2 மகன்களுக்கும் மொட்டை போட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவரது மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.