20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த நிலையில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான புறக்கணிப்பு முடிவில் எந்த மாற்றமும் இல்லை. எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மந்திரி சபை கூட்டத்தில் அவர் இது தொடர்பாக பேசுகையில், 20 ஓவர் உலகக் கோப்பை தொடர்பாக நாங்கள் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். இது விளையாட்டு களம் அரசியல் இருக்க கூடாது என்பதால் நாங்கள் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம். விளையாட்டில் அரசியல் இருக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

நாங்கள் வங்க தேசத்துக்கு முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும். இது மிகவும் பொருத்தமான முடிவு என்று நான் நினைக்கிறேன். நாங்கள் நன்கு ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளோம். இவ்வாறு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கூறினார்.

உலகக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 15-ம் தேதி கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தப் போட்டி நடக்காமல் போனால் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.