திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1595 கோடியில் 111 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை அறிவித்தார்.
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சாலை, தெருவிளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ரூ.14.20 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
திண்டுக்கல் மாநகராட்சியில் பாதாளசாக்கடை ரூ.8 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.
பழநி இடும்பன்குளம், சண்முகாநதி ரூ.6 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
நத்தம் கலை அறிவியல் கல்லூரிக்கு ரூ.18.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படும்.
அதிகளவில் முருங்கை பயிரிடப்படும் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள மார்க்கம்பட்டியில் உலக தரத்திலான முருங்கை ஏற்றுமதிக்கான பதப்படுத்தும் தொழிற்சாலை ரூ.7 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு 100 ஏக்கர் பரப்பில் அனைத்து உட்கட்டமைப்புகளையும் உள்ளடக்கிய உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா முதலீட்டு பூங்கா வில்பட்டி ஊராட்சி பகுதியில் அமைக்கப்படும்.
கண்ணுவலி கிழங்கு பயிர் உற்பத்தியில் தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது. இதற்கு நிலையான நியாயமான விலை கிடைக்க மத்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.18 கோடி செல்வில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படும்.