திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், 337 கோடியே 84 இலட்சம் ரூபாய் செலவிலான 111 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 174 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 2,62,864 பயனாளிகளுக்கு 1082 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் மொத்தம், 337 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவிலான 111 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் நேற்று திறந்து வைத்தார். அதை தொடர்ந்து மொத்தம், 174 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 212 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். அதையடுத்து வருவாய் துறை, கூட்டுறவு துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் சார்பில் மொத்தம் 1082 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2,62,864 பயனாளிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

முன்னதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் 38 புதிய நகரப் பேருந்துகள் மற்றும் 23 புதிய புறநகர் பேருந்துகள், என மொத்தம் 61 புதிய பேருந்துகளின் சேவைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் இ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கே.ஆர்.பெரியகருப்பன், அர.சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.சச்சிதானந்தம், செல்வி ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் இ.பெ.செந்தில்குமார், காந்தி ராஜன், மாவட்ட கலெக்டர் செ.சரவணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி பார்த்திபன், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் ஜோ.இளமதி, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.