சென்னை; கோவை, நீலகிரி உள்பட தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்; தெற்கு உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. அதேபோல, வட தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்; திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை மலைப்பகுதிகள், தேனி மலைப்பகுதிகள், நெல்லை மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மலைப்பகுதிகள் நாளை ( ஆகஸ்ட் 7); நீலகிரி, கோவை மற்றும் தேனி மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.