தனியார் பள்ளிகளில் கட்டண விபரங்களை பள்ளி முகப்பில் வைக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை எந்த ஒரு தனியார் பள்ளியும் பின்பற்றவில்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகி மா.து.ராஜ்குமார் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தனியார் பள்ளிகளில் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டண விவரங்கள் இணையத்தில் வெளி யிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் இயக்குநரகத்தின் கீழ் 12 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அனைத்துத் தனியார் பள்ளிகளுக்கும் அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களை, பள்ளிகளின் விளம்பரப் பலகைகளில் வெளி யிடுவதை கட்டாய மாக்கும்படி, தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் மே 25ஆம் தேதி உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், ஜூன் 5ஆம் தேதிக்குள் கட்டண விவரங் களை விளம்பரப் பலகையில் வெளி யிடும்படி, அனைத்துத் தனியார் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகள் இயக்குநர் ஜூன் 1ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்தார்.
இந்நிலையில், மாநில தகவல் ஆணைய உத்தரவு மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் பிறப்பித்த அறிவிப்பையும் ரத்து செய்யக் கோரி அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கட்டண விவரங்களை வெளியிட மறுக்க முடியாது என்றும், தகவல் உரிமைச் சட்டத்தில் விலக்களிக்கும் பிரிவில் கூட, பொது நலன் சார்ந்த விவரங்களை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளது என்றும், கல்விக் கட்டணம் என்பது கருப்புப் பணம் அல்ல என்பதால், அதன் விவரங்களை சொல்லலாமே என உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எந்த ஒரு தனியார் பள்ளியும் இந்த விதிமுறைகளை பின்பற்றாத துரதிஷ்டவசமானது மாணவர்களின் கல்வி பெரும் உரிமைக்கு எதிரானது என்று உடனடியாக இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முதல்வர் ஜோசப் விஜய் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் தலைவர் வேல்முருகன் சார்பில் தாம் வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.