சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 4,640 குறைந்துள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு அதிவேகமாக உயர்ந்து வருகிறது. ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் சமீபமாக தங்கம் விலை ஒருநாளில் ஆயிரக்கணக்கில் வித்தியாசம் ஏற்படுகிறது. கடந்த ஜனவரி 29-ம் தேதி அன்று அதிகபட்சமாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 9,520 உயர்ந்தது. பின்னர் குறைந்த நிலையில் கடந்த இரு நாள்கள் தங்கத்தின் விலை உயர்ந்தது.
இந்நிலையில் நேற்று(வியாழக்கிழமை) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,14,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ. 580 குறைந்து ரூ. 14,320-க்கு விற்பனையானது. வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ. 300-க்கும் ஒரு கிலோ ரூ. 20,000 குறைந்து ரூ. 3,00,000 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.