டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சிஷெல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி சந்தித்து பேசினார.்

இந்தியாவுக்கு 5 நாள் பயணமாக வந்த சிஷெல்ஸ் அதிபர் கடந்த 5-ம் தேதி சென்னை வந்தார். தொடர்ந்து சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நேற்று முன்தினம் டெல்லி சென்றார். தொடர்ந்து நேற்று காலை மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவின் மகாசாகர் திட்டத்திற்கு ஆதரவு அளித்து வருவதாக சிஷெல்ஸ் அதிபர் தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சிஷெல்ஸ் அதிபர் சந்தித்து பேசினார். அப்போது சர்வதேச பிரச்சினைகள், இரு நாட்டு உறவுகள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முன்னதாக வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சிஷெல்ஸ் ஒரு முக்கியமான கடல்சார் அண்டை நாடு. இந்தியாவின் மகாசாகர் தொலைநோக்கு திட்டத்தின் முக்கிய ஆதரவு நாடாகவும் திகழ்கிறது. தெற்கு பிராந்திய நாடுகளுடனான இந்தியாவின் ஒத்துழைப்பை வெளிக்காட்டுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.