இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து, கடந்த 21-ம் தேதி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், தோல்வி தொடர்பாக பேசிய நியூசிலாந்து கேப்டன் சாண்ட்னர் கூறியதாவது, இந்திய அணி சிறப்பாக விளையாடியது. 200 அல்லது 210 ரன்கள் மட்டும் போதாது என்பதை அறிந்து, நாங்கள் இன்னும் கொஞ்சம் கடினமாக விளையாடி இருக்க வேண்டும். நேற்று முன்தினம் நாங்கள் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளானோம், அதிலிருந்து கற்றுக் கொண்டு மீண்டு வர முயற்சிப்பது நல்லது. ஏனென்றால் மீண்டும் அதைச் செய்ய வேண்டியிருக்கும். இது ஒரு நல்ல விக்கெட் மற்றும் வேகமான அவுட்பீல்ட். பனி கடினமாக இருந்தது. ஒரு சுழற்பந்து வீச்சாளராக, பந்தைப் பிடிக்க முயற்சிப்பது சற்று சவால் தான் என தெரிவித்தார்.