மதுரை, செப். 26-

மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா கடந்த 17-ந்தேதி அதிவிமரிசையாக நடைபெற்றது. அப்போது மாநகராட்சி பக்தர்களின் வசதிக்காக நகரின் பல இடங்களில் பொதுமக்கள், பக்தர்கள் குடிநீர் குடிப்பதற்கும், நவீன கழிப்பறையையும் கோவிலைச் சுற்றியும், மாசி வீதிகளில் ஆங்காங்கே வைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், பக்தர்கள் சிரமமின்றி மீனாட்சியம்மனை தரிசனம் செய்து விட்டு சென்றார்கள்.

இதனால் மாநகராட்சியையும், ஆணையாளரையும் சிறப்பாக குடமுழுக்கு விழாவை நல்ல முறையில் செய்தது என பொதுமக்கள் பாராட்டினர். ஆனால் ஆங்காங்கே வைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள், நவீன கழிப்பறைகள் அனைத்தையும் கோவில் அருகிலேயே ஒட்டுமொத்தமாக வைத்துவிட்டு அகற்றாமல் சென்று விட்டார்கள். இதனால் நாள்தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் முகம் சுழித்து வருகிறார்கள்.