மதுரை, செப். 26-

மதுரை மாநகராட்சி தலைமை பொறியாளர் அலுவலகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்தனர். இதில் 1.35 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சோதனையின்போது தலைமை பொறியாளர் உள்பட குற்றம் சாட்டப்பட்ட உதவி பொறியாளர்கள் மயிலேரிநாதன், பாலமுருகன், தொழில் நுட்ப உதவியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், அலுவலக ஊழியர்கள் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என லஞ்ச ஒழிப்புத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.