கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் வே. ஜெயராமபாண்டியன், தலைமையில் அமைக்கப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர், ஹோட்டல்கள், பேக்கரிகள், மளிகைக் கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகளில் தொடர் ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜீன் மாதம் இங்கு இயங்கி வந்த 'தாஜ் ஹோட்டலில்' குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 15 கிலோ பழைய உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன,. சுகாதாரக் குறைபாடுகள் காரணமாக அந்த உணவகத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, அதன் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உரிய உரிமம் இல்லாமலும், சுகாதாரக் குறைபாட்டுடனும் இயங்கி வந்த 'பாலாஜி கேண்டீன்' தற்காலிகமாக மூடப்பட்டதுக்ஷஇராஜாவூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடை ஒன்றிற்கு, இரண்டாவது முறையாக பிடிபட்டதால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, கடையின் வணிகம் நிறுத்தி வைக்கப்பட்டது.தோவாளை வட்டாரத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 10 கிலோ காலாவதியான உணவுப் பொருட்களும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்ட கடைகளுக்கு 1,000 முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது,.

பொதுமக்களுக்கு வேண்டுகோள்: உணவுப் பாதுகாப்பு குறித்த புகார்களைப் பொதுமக்கள் 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும், TNFSD App வழியாகவும் தெரிவிக்கலாம் என நியமன அலுவலர் ஜெயராமபாண்டியன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட நியமன அலுவலரின் இந்த அதிரடி நடவடிக்கைகள், மாவட்டத்தில் தரமான மற்றும் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன எனப் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நேரடி செயல்பாட்டினால் கன்னியாகுமரியில் மாவட்ட உணவகங்கள் கண்காணிப்பு வட்டத்தில் உள்ளது.