சென்னை: 80-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான மு.க. ஸ்டாலின் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: பிற்போக்கையும் பழமையையும் வேரறுத்து, பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே நமது இந்தியா! கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்! நாளை என்பதை அறிவாலும் ஆற்றலாலும் வடிவமைத்து, சமத்துவம் – சகோதரத்துவம் – முற்போக்கு – மனிதநேயம் உள்ளிட்ட விழுமியங்களோடு ஒன்றுபட்டு முன்னேறுவோம்! அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.