இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரும், ஆஸ்கர் நாயகனுமான ஏ.ஆர் ராகுமான் நேற்று தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித் தலைவர், திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஏ.ஆர்.ரகுமானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

இசையால் எல்லைகளைக் கடந்து, எட்டுத்திக்கும் ஆளும் அன்பு இளவல் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! உங்களது இசையைப் போலவே நீங்களும் என்றும் இளமையோடும் துள்ளலோடும் திகழ்ந்து, தொடர்ந்து சாதனைகளைப் படைத்திட விழைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவில் அசைக்க முடியாத இசையமைப்பாளராக விளங்கி வருபவர் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான். இந்தியா மட்டுமின்றி கடல் கடந்தும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இந்திய இசையமைப்பாளராக ஏ.ஆர். ரகுமான் திகழ்கிறார். மேற்கத்திய இசையை இந்தியர்கள் கேட்டு வந்ததை மாற்றி, தனது அசாத்திய திறமையால் இந்திய இசையை உலகம் முழுவதும் பரவச் செய்தவர் ஏ.ஆர். ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது.