எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளில் அ.தி.மு.க.வை ஆட்சி பீடத்தில் அமர வைக்க உறுதி ஏற்போம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,

அ.தி.மு.க.வை உருவாக்கிய மக்கள் திலகத்தின் பிறந்த நாள். இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், மக்கள் மனங்களில் இருந்து நீங்காமல் நிலைத்த புகழோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர். தமிழ் மொழிக்காக, தமிழ் இனத்திற்காக, தமிழ் நாட்டிற்காக, தன்னையே அர்ப்பணித்து, தமிழர்களை தலைநிமிர வைப்பதற்கும், அநீதியை அழித்து, நீதியை நிலைநாட்டுவதற்கும் அவர் ஏந்திய ஆயுதம் தான் அ.தி.மு.க.. இந்த அ.தி.மு.க. இயக்கத்தை ஆட்சி பீடத்தில் மீண்டும் அமர்த்த அனைவரும் முழு மனதோடு ஈடுபட இந்நாளில் உளமார உறுதியேற்போம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.