மேலூர், செப். 25-
எப்கியூஎல் மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மேலூரைச் சேர்ந்த சாந்தகுமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘எப்கியூஎல் செயலியில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் என பல மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ரூ.1,000 கோடிக்கும் மேல் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டுள்ளனர். இதில் முதலீடு செய்தவர்கள் பெரும்பாலும் பெண்கள், ஏழை, நடுத்தர வகுப்பினர் மற்றும் கூலித் தொழிலாளர்கள்.
இந்த செயலி கிரிப்டோ கரன்சி, அமெரிக்க டாலர் போன்ற சர்வதேச தொடர்புகளோடு இருப்பதாலும், இணையத்தை பயன்படுத்தி மோசடி நடைபெற்றுள்ளதாலும், விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார்.