காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி (79). இவர் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள கங்காராவ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
79 வயதான சோனியா காந்தி, கடந்த சில ஆண்டுகளாகவே வயது மூப்பு காரணமாகத் தீவிர அரசியலில் இருந்து சற்று விலகியே இருந்தார். பாராடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் பங்கேற்றாலும் முன்பு போல அதிகளவில் கட்சி செயல்பாடுகளில் கலந்து கொள்ளாமலேயே இருந்து வந்தார். இதற்கிடையே சோனியா காந்தி, டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்டார். அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது வழக்கமான மருத்துவப் பரிசோதனைதான் என்றாலும், அவருக்கு நீண்ட நாட்களாக இருமல் இருந்ததாகவும் இதன் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.. மேலும், டெல்லியில் காற்று மாசு மிக மோசமாக இருக்கும் சூழலில், வயது மூப்பு காரணமாக சோனியா காந்தி அடிக்கடி மருத்துவப் பரிசோதனைக்குச் செல்வதும் வழக்கம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.