2026-ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் மெல்போர்ன் நகரில் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் - நெதர்லாந்தின் ஜெஸ்பர் டி ஜோங்கை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய டேனில் மெத்வதேவ் 7-5, 6-2, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்ற ஆட்டங்களில் கேஸ்பர் ரூட் (நார்வே), அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா), ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.