சென்னை: அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் 3 பேர் அமைச்சர் புஸ்சி ஆனந்துடன் திடீரென சந்தித்து பேசியதால் தலைமை செயலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக சட்டப் பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் வாசித்து முடிந்த உடன் கூட்டம் முடிவடைந்தது. இதையடுத்து, அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆன எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகிய 3 எம்எல்ஏக்களும் சட்டப் பேரவை வளாகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்சி ஆனந்தை சந்தித்து பேசினர். பின்னர் அமைச்சருடன் 3 அதிருப்தி எம்எல்ஏக்களும் புஸ்சி ஆனந்த் அறைக்கு சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் என்ன பிரச்னை குறித்து பேசினார்கள் என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.Geographic Reference

சட்டப் பேரவை தேர்தல் முடிந்ததும், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் செயல்பட்டு வந்தனர். அவர்கள் திடீரென மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் அதிமுகவில் இணைந்துவிட்டனர். ஆனால் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 எம்எல்ஏக்கள் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து விட்டனர். ஆனால் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோர் அதிமுக எம்எல்ஏ பதவியை இன்னும் ராஜினாமா செய்யாமல், அதேநேரம் அதிமுக பொதுச் செயலாளருக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.