அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசில் துணை அதிபராக ஜே.டி. வான்ஸ் பதவி வகித்து வருகிறார். இவருடைய மனைவி உஷா வான்ஸ். இந்த தம்பதிக்கு, இவான் ( 8), விவேக் (5) மற்றும் மிராபெல் ( 4) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், வான்ஸ்-உஷா தம்பதிக்கு 4-வது குழந்தை பிறக்க உள்ளது. இதனை அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.

அதில், உஷாவுக்கு 4-வது ஒரு குழந்தை பிறக்க உள்ளது. அவன் பையனாக இருப்பான். ஜூலை மாத இறுதியில் அவனை வரவேற்க காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, அவர்களுக்கு வெள்ளை மாளிகையில் இருந்து வாழ்த்து மழை பொழியப்பட்டு வருகிறது. உஷாவின் பெற்றோர் இந்திய வம்சாவளியான கிரிஷ் சிலுகுரி மற்றும் லட்சுமி சிலுகுரி ஆவர். இவர்கள் 1970-ம் ஆண்டின் பிற்பாதியில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர்.

அமெரிக்காவில் இருவரும் கல்லூரியில் பேராசிரியர் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்கவாசிகள் நிறைய குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என அரசியலில் நுழையும்போதே வான்ஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.