டெல்லியில் தமிழக பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, த.வெ.க., நா.த.க என நான்கு முனை போட்டி இருக்கிறது. மற்றவர்களை சிறுமைப்படுத்தவில்லை தேர்தல் நெருங்க நெருங்க தி.மு.க, அ.தி.மு.க கூட்டணிகளுக்கு இடையிலான இருமுனை போட்டியாக களம் மாறும்.

விஜய்யை நான் சாதாராணமாக எடை போடவில்லை. அவர் ஒரு சினிமா ஸ்டார். மாஸ் இருக்கிற ஸ்டார். த.வெ.க.வில் அண்ணன் செங்கோட்டையன் உட்பட பலர் இணைந்திருக்கிறார்கள். களத்தில் பார்க்கிறேன். தொண்டர்கள் பரபரப்பாக வேலை செய்கிறார்கள். 2026 தேர்தலில் தி.மு.க. வேண்டாம் என விஜய் நினைத்தால் யார் வேண்டும் என்பதை அவர் தெளிவாக கூற வேண்டும். எங்களுக்கும் அ.தி.மு.க.வுக்கும் கொள்கை வேறுபாடு இருந்தாலும் தி.மு.க.வை வீழ்த்த கூட்டணி வைத்துள்ளோம் என்றார்.