சென்னை, அக். 1-
தமிழக அரசியல் களத்தில் இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் பிரச்சார மேடைகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட காரசாரமான பேச்சுக்கள், கட்சிக்குள்ளும் வெளியிலும் மிகப்பெரிய புயலை கிளப்பியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை நேரடியாக தாக்கிப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அரசியலில் அதிமுகவை அழிக்க நினைத்தால் நீங்களே காணாமல் போய்விடுவீர்கள்” என எச்சரித்ததோடு, அவரது திரையுலக வருமானம், வரி கணக்கு மற்றும் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தார். இதற்கு தவெக தரப்பில் இருந்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடனடியாகப் பதிலடி கொடுத்து வரும் சூழலில், எடப்பாடி பழனிசாமி இவ்வளவு ஆவேசமாகவும் ஒன் மேன் ஆர்மியாகவும் களமிறங்கியதன் பின்னணியில் 10 முக்கிய அரசியல் நெருக்கடிகளால் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
முதலாவதாக, இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒருவேளை தவெக வெற்றி பெற்றால், அது எஞ்சிய 5 தொகுதிகளிலும் அவர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்து அதிமுகவின் இருப்பையே கேள்விக்குறியாக்கிவிடும். இரண்டாவதாக, இந்தத் தேர்தல் முடிவுகள் சாதகமாக இல்லாத பட்சத்தில், அதிமுகவைச் சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெக பக்கம் தாவக்கூடும் என்ற அச்சம் எடப்பாடிக்கு உள்ளது. மூன்றாவதாக, திமுக - அதிமுக இரண்டும் கூட்டணி அமைத்து தங்களை எதிர்ப்பதாக தவெக பிரச்சாரம் செய்து வரும் நிலையில், மக்களுக்கு வாக்களிப்பின் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டு
விட்டதாக அவர்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வாய்ப்புள்ளது. இது எடப்பாடிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும்.
நான்காவதாக, கட்சியின் மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகிய இருவரையும் பிரச்சார நட்சத்திரப் பட்டியலில் சேர்க்காமல் எடப்பாடி பழனிசாமி ஓரங்கட்டியுள்ளார். இதனால் அதிருப்தியில் உள்ள இவர்கள், தேர்தல் முடிவுகள் நெகட்டிவாக வந்தால் எடப்பாடியின் கட்டுப்பாட்டை கைப்பற்ற காத்திருக்கின்றனர். தாராபுரத்தில் கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தினரும், மதுராந்தகத்தில் வன்னியர் சமூகத்தினரும் கணிசமாக உள்ள நிலையில், அந்த சமூக பிரதிநிதிகளாகத் திகழும் வேலுமணியையும், சி.வி.எஸ்ஸையும் ஒதுக்கியது உள்கட்சிக்குள் இரகசிய எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இந்த அதிருப்தி வாக்குகள் சிதறி தவெகவிற்கு சாதகமாக மாறக்கூடும் என்பதை உணர்ந்து கே.பி. முனுசாமி உள்ளிட்டோரை களமிறக்கி நிலைமையை சமாளிக்க எடப்பாடி முயன்று வருகிறார்.
ஐந்தாவதாக, இத்தொகுதி
களில் தோல்வி ஏற்பட்டால் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் கூட்டணி மீண்டும் போர்க்கொடி தூக்கி “நாங்கள்தான் உண்மையான அதிமுக” என உரிமை கோரத் தொடங்குவார்கள். ஆறாவதாக, ஏற்கனவே அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை ஒன்றிணைத்து 21க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு “போட்டி அதிமுக” உருவாகும் அபாயம் உள்ளது. இது தீவிரமடைந்தால், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சந்தித்தது போல அல்லது சமீபத்திய இடைத்தேர்தல்களில் நடந்தது போல இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயமும் எடப்பாடி தரப்பை அச்சுறுத்துகிறது.
ஏழாவதாக, இந்த உள்கட்சிப் பூசல் உச்சமடைந்தால் சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் போட்டி அதிமுகவாகச் செயல்படும் சூழல் உருவாகி, எடப்பாடியின் தலைமைக்கே சாவுமணி அடித்துவிடும். எட்டாவதாக, தேசிய அளவில் ஆளும் பாஜக, திராவிட சித்தாந்தமற்ற ஒரு மாற்றை தமிழகத்தில் உருவாக்க விரும்புகிறது. கூட்டணியில் இருந்தாலும் நயினார் நாகேந்திரன் போன்ற தலைவர்கள் அதிமுகவிற்கு ஆதரவாகப் பேசினாலும், பாஜகவின் முக்கியத் தலைவர்கள் பிரச்சாரத்தில் பெருமளவில் ஈடுபடாமல் ஒதுங்கியே நிற்கின்றனர்.
ஒன்பதாவதாக, கூட்டணியில் இருந்த பாமக எந்தப் பக்கமும் ஆதரவு இல்லை என வெளிப்படையாக அறிவித்துவிட்டதும், கூட்டணிக் கட்சிகளின் போதிய ஒத்துழைப்பு இல்லாததும் அதிமுகவிற்குப் பெருத்த பின்னடைவாக மாறியுள்ளது. பத்தாவதாக, களத்தில் தீவிரமாகப் பணியாற்றும் திமுக, இந்த வாக்குச் சிதறல்கள் அனைத்தும் தவெகவிற்கு சாதகமாக மாறிவிடுமோ என்ற கணக்கீட்டில் வியூ
கங்களை வகுத்து வருகிறது.
இப்படி நாலாபுறமும் சூழ்ந்துள்ள நெருக்கடிகளைத் திசைதிருப்பவே, எடப்பாடி பழனிசாமி விஜய் மீதும் தவெக மீதும் பாய்கிறார். இதன் தொடர்ச்சியாகவே ஆதவ் அர்ஜுனா போன்ற தவெக தலைவர்கள் எடப்பாடிக்கு எதிராகக் காரசாரமான பதிலடிகளைக் கொடுத்து வருகின்றனர். இந்த காரசார மோதல்களுக்குப் பின்னால் இருக்கும் மேலும் பல சுவாரஸ்யமான உள்கட்சி அரசியல் ரகசியங்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளிவரக் காத்திருக்கி
ன்றன.