தங்கம் விலை கடந்த மாதம் (டிசம்பர்) 15-ம் தேதி ஒரு சவரன் ரூ. ஒரு லட்சத்தை தாண்டியது. அதன் பின்னர் விலை குறைந்த நிலையில், அதே மாதம் 22-ம் தேதியில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் பயணித்தது. கடந்த மாதம் 28-ம் தேதி புதிய உச்சத்தை தொட்டு, பிறகு விறுவிறுவென இறங்கியது. அப்படியாக விலை குறைந்து வந்து, கடந்த ஒரு வாரமாக மீண்டும் ஏற்றத்திலேயே தங்கம் விலை இருந்து வருகிறது.

அதை தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை அதிகரித்தது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,07,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.170 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,450-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் சற்று உயர்ந்தது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.8,000 அதிகரித்து, ரூ.3,18,000-க்கும், கிராமுக்கு ரூ.8 அதிகரித்து. ஒரு கிராம் ரூ.318-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,08,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.160 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,610-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி நேற்று ரூ. 12,000 அதிகரித்து, ரூ.3,30,000-க்கும், கிராமுக்கு ரூ.12அதிகரித்து. ஒரு கிராம் ரூ.330-க்கும் விற்பனை செய்யப்பட்டது.