மாநிலங்களவைக்கு மீண்டும் போட்டியிட விரும்பவில்லை என்று மாநிலங்களவை உறுப்பினரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரான திக்விஜய் சிங், 1993 முதல் 1998 வரையும் பின்னர் 1998 முதல் 2003 வரையும் இரண்டுமுறை தொடர்ச்சியாக முதல்வராக பதவி வகித்தவர். 2003 சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி தோல்வி அடைந்ததை அடுத்து, அடுத்த 10 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார்.

அதன்பிறகு, 2013ல் தீவிர அரசியலுக்கு வந்த திக்விஜய் சிங், 2014ல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பதவிக்காலம் 2000-ல் முடிவடைந்தபோது, மீண்டும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏறக்குறைய 12 ஆண்டு காலமாக மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் திக்விஜய் சிங்கின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவடைய உள்ளது. இந்நிலையில், திக்விஜய் சிங், நான் மீண்டும் மாநிலங்களவைக்குப் போட்டியிட விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.