மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொட்டல்பட்டி கிராம மக்களின் தெருவிளக்கு மற்றும் சாக்கடை வசதி தொடர்பான கோரிக்கைக்கு, உசிலம்பட்டிசட்டமன்ற உறுப்பினர் SOP. விஜய் மகாலிங்கம் MLA அவர்கள் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

பொதுமக்கள் அளித்த மனுவை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர், அவர்களின் பிரச்சினையை தாமதமின்றி தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

அதன் தொடர்ச்சியாக, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அமைதி பொட்டல்பட்டி கிராமத்திற்கு நேரில் சென்று, தெருவிளக்கு மற்றும் சாக்கடை பிரச்சினைகளுக்கான பணிகளை மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளை விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுத்தார்.