மதுரை, அக். 9-

மதுரை மாநகராட்சியில். 4 நாட்கள் நடைபெற்ற தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறுவதாக மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

மாநகராட்சி ஆணையா

ளருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கு சாதகமானவை குறித்து உறுதியளிக்கப்பட்டதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து தூய்மைப் பணிகளில் தனியார் மையத்தை அனுமதிக்க கூடாது செய்ய வேண்டும் அரசாணை 152 ,109ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி தொழிலாளர்கள் கடந்த நான்கு நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் கௌரவ்குமாருடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் லாரி ஓட்டுநர்கள், அனிமேட்ட

ர்கள் டிபிசி கொசு ஒழிப்பு

பணியாளர்கள் என அனைத்து தொழிலா

ளர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பணிகள் முடங்கியுள்ளன இதனால் மாநகரில் பல்வேறு பகுதிகளிலும் குப்பைகள் தேங்கியது.

பேச்சுவார்த்தையின் முடிவில் தொழிற்சங்க

த்தினரின் சில கோரிக்கை

கள் நிறைவேற்றுவதாக ஆணையாளர் உறுதி அளித்த நிலையில் போரா

ட்டத்தை வாபஸ் பெறு

வதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

இது குறித்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய தொழிற்சங்கத்தினர்,

தொழிலாளர்களுக்கு சாதகமான அரசாணை ஒரு சில மாதங்களில் கிடைக்கும் என உறுதியளித்தார்கள் ; அவர்லேண்ட் ஒப்பந்த நிறுவனத்திற்கு மீண்டும் பணி வழங்கப்படாது என நகராட்சி நிர்வாக இயக்குனர் உறுதியளித்தார் எனவும், தூய்மை பணியா

ளர்கள் நிரந்தர பணி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மதித்து தூய்மை பணியாளர்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என தெரிவித்துள்ளனர்.

நிர்வா ஒப்புதல் இல்லாமல் இனி யாருடைய பணி நீக்கமும் இருக்காது என உறுதியளித்துள்ளனர். குறைந்தபட்ச தீபாவளி போனஸ் குறித்து ஆணையாளரிடம் பேசியுள்ளோம், நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் பேசிவிட்டு சொல்வதாக கூறியுள்ளார்.

்அவர்லேண்ட் நிறுவனத்தின் மூலமாக செய்யப்பட்ட தொழிலாளர்களின் மீதான பணி நீக்க நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக அது குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக ஆணையாளர் தெரி

வித்துள்ளார்.

பேச்சுவார்த்தையில் சாதகமான சில முடிவுகள் கிடைத்துள்ளதால் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று தற்போது முதல் பணிகளை தொடங்க உள்ளோம் எனவும், போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி எனவும், 4 நாட்கள் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் எங்களின் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர்.கூறியுள்ளார்.

்அவர்லேண்ட் நிறுவனத்தின் மூலமாக செய்யப்பட்ட தொழிலாளர்களின் மீதான பணி நீக்க நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக அது குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்; பேச்சுவார்த்தையில் சாதகமான சில முடிவுகள் கிடைத்துள்ளதால் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று தற்போது முதல் பணிகளை தொடங்க உள்ளோம் எனவும்,

போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி எனவும், 4 நாட்கள் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் எங்களின் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.