மதுரை, அக். 9-
ரூ.2.35 கோடி ஆதிதிராவிட விடுதி நிதி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் எவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பிய ஐகோர்ட் கிளை, விசாரணை அதிகாரி ஆஜராக வேண்டு
மென உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கையைச் சேர்ந்த சக்திவேல், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘’சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிட விடுதி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியே 35 லட்சம் நிதியில் பெரும் மோசடி நடந்துள்ளது.
2017 முதல் 2023 வரை அரசு ஒதுக்கிய தொகை மாணவர்களின் கணக்கில் செலுத்தப்படாமல், அலுவலர்களால் மோசடி செய்யப் பட்டுள்ளது. புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. குற்றச்சாட்டில் ஈடுபட்ட
வர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பலர் உயர் பதவியில் உள்ளவர்கள் என்பதால் விசாரணை முறையாக நடைபெற இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், ‘’8 தாசில்தார்கள் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என கூறப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘’குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது துறைரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு
ள்ளது? இவர்களுக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளதா? முறைகேட்டில் ஈடுபட்ட
வர்களுக்கு எவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டது?’’ என்றனர்.
அப்போது அரசு வழக்கறிஞர், வழக்கு விசாரணைக்காக வந்திருந்த அரசு அலுவலர்களிடம் வழக்கு தொடர்பாக சந்தேகத்தை கேட்டனர். இதைப் பார்த்து கோபமடைந்த நீதிபதிகள், ‘’பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. வழக்கு விசாரணைக்கு அலுவலக உதவியா
ளர்களை அனுப்பி வைத்துள்ளனர்.
முதலில் இவர்களை வெளியேறச் சொல்லுங்கள். இனி இதுபோன்ற வழக்கு
களில் உதவியாளர்களை அனுப்பினால் சிறை செல்ல நேரிடும்’’ எனக் கோபத்துடன் கூறி, ‘’இந்த வழக்கின் விசாரணை அதிகாரி நாளை (இன்று) நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’’ என உத்த
ரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
தமிழ்நாட்டில் பைக் டாக்சி அனுமதிப்பது தொடர்பான வழக்கு நேற்று மீண்டும் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில், ‘’நீதிமன்றத்தில் ஏற்கனவே தெரிவித்தபடி வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் அதன் அடிப்படையில் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘’பைக் டாக்சி தொடர்பாக அமைக்க
ப்பட்ட குழுவின் அடிப்ப
டையில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை 6 மாத காலத்தில் உருவாக்க வேண்டும்’’ எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.