இந்திய திருநாட்டின் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரையில் 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிலைமான் மற்றும் எஸ். புளியங்குளம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் சுரேஷ் ஆகியோர் தீர்மானங்களை நிறைவேற்றி பொதுமக்களிடம் விளக்கினர். கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சிறுபாசன குளங்கள் மற்றும் ஏரிகள் புதுப்பித்தல், ஜல் ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்கத்திட்டம் மற்றும் இதர கூட்டப்பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக மதுரை மாவட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா, , சுதந்திர தின விழாவை முன்னிட்டு
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், எஸ்.புளியங்குளம் கிராமத்தில் நடைபெற்ற
கிராம சபை கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை .சதீஸ் பாபு அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) .சித்தார்த் போகர்னா,, சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியர் .பொன்ராஜ் , ஆதிதிராவிடர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செல்வன் , உதவி இயக்குநர் ஊராட்சிகள் மற்றும் தணிக்கை (தெற்கு) சுரேஷ் , தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பிரபா , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தி க்ஷ, வட்டாட்சியர் தானமூர்த்தி அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி காந்தம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.