இந்திய திருநாட்டின் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரையில் 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒத்தக்கடை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஒத்தக்கடை ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் மணிகண்டன்,தீர்மானங்களை நிறைவேற்றி பொதுமக்களிடம் விளக்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்ல பாண்டியன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சிறுபாசன குளங்கள் மற்றும் ஏரிகள் புதுப்பித்தல், ஜல் ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்கத்திட்டம் மற்றும் இதர கூட்டப்பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பொழுதுபோக்கு
Latest Posts
எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தில் பதிவான வழக்குகளின் நிலை குறித்து ஆய்வு செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு
தமிழகம்
October 17, 2026
சூரிய ஒளி மின் தகடுகளை நிறுவிய 5 நாள்களுக்குள் இணைப்பு வழங்கப்படும்- மின் வாரிய அதிகாரி தகவல்
தமிழகம்